1942-இல் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் தீவிரமாக பங்கேற்று ‘ஆத்திரம் கொள்’ என்பது போன்ற பல சுதந்திர கீதங்களைப் பாடியவர் கவிஞர் கா.மு. ஷெரிப். 1946 – இல் வெளியான இவரது ‘ஒளி’ என்ற கவிதைத் தொகுப்பில் பல சுதந்திர கீதங்களைக் காணலாம்.
“பாட்டும் நானே” யாரெழுதியது?
24/04/2012 at 9:24 pm (ஜெயகாந்தன் பார்வையில், பாட்டும் நானே! பாவமும் நானே!, பிழைக்கத் தெரியாத மனுஷர்)
திருவிளையாடல் படத்தில் “பாட்டும் நானே பாவமும் நானே” என்ற பாடல்கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்டது என்று பரவலாக நம்பப்படும் வேளையில் நான் இவ்வலையில் அது கவி.கா.மு.ஷெரீப் அவர்களால் எழுதப்பட்டது என்று குறிப்பிட்டதற்கு ஏதேனும் வலுவான ஆதாரங்கள் உங்களிடத்தில் இருக்கின்றதா? என்று வாசகர்கள் வினவுகிறார்கள். திரு.ஜெயகாந்தன் அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அவரிடம் தாராளமாக கேட்டுக் கொள்ளலாம். திரு.ஜெயகாந்த்தன் எழுதிய “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலின் நகலை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். - அப்துல் கையூம்
ஆதாரம்:
நூல் : ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்,
ஆசிரியர் : ஜெயகாந்தன்
வெளியீடு : ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை – 17
கவி. கா. மு. ஷெரீப் இருட்டடிப்பு செய்யப்படுகிறாரா?
24/04/2012 at 8:39 pm (Uncategorized)
வாசகர் கடிதம்
கவிமணி கா. மு. ஷெரீப் பற்றி மீண்டுமொரு தடவை எஸ். ஐ. நாகூர் கனி எழுதியிருந்ததைப் படித்தேன்.
நியாயமான குறை ஒன்றை அவர் தெரிவித்திருந்தார். கவிஞர் ஷெரீபை நெஞ்சம் மறப்பதில்லை மறந்ததேனோ என்ற அவரது ஆதங்கத்தை வாசித்த போது, ஆஸ்தான கவிஞர் ஒருவரை அவ்வளவு இலேசாக மறந்து விடலாகாது என்றே எண்ணத் தோன்றியது.
‘வெறுமனே பழைய பாடல்களை மட்டும் ஒளி பரப்பிக் கொண்டிருந்தால் போதுமா? என்றொரு நியாயமான கேள்வியைக் கூட கேட்டிருந்தார்.
ஆம், நிகழ்ச்சி அறிவிப்பாளர்கள் பெரும்பாலும் இளம் தலைமுறையினரே, இவர்களுக்கு பழம்பெரும் பாடகர்கள், கவிஞர்கள் பற்றிய குறிப்புகள் தெரியாதிருக்கலாம் என்றாலும் இசைத் தட்டு குறிப்புகளையாவது வாசித்து தெரிந்து கொள்ள முயல வேண்டும்.
இலங்கை வானொலி வர்த்தக சேவையில் பீ. எச். அப்துல் ஹமீத், ராஜேஸ்வரி சண்முகம், மயில் வாகனம் சர்வானந்தா போன்றோர் பாடலாசிரியர் பற்றி குறிப்பிட்டு விட்டு பாடல்களை ஒலிபரப்பு செய்து புகழ்பெற்றனர். டி. வி. நிகழ்ச்சிகளிலும் இதனைச் செய்யலாம் தானே? ‘சக்தி’ ஜனரஞ்சகமான ஒளிபரப்பாகையால், வெறும் பாடல்களை மட்டும் ஒளிபரப்பு செய்வது அழகல்ல.
ஒளிபரப்பு – அறிவிப்பு என்பது வெறுமனே எழுதிக் கொடுத்ததை எடுத்து வாசிப்பதாக இருக்கக் கூடாது. அறிவிப்பு சார்ந்த குறிப்புகள் தான் நிகழ்ச்சிகளை நிமிர்த்தும்.
இது இருக்கட்டும் ஆஸ்தான கவிஞர் வரிசையில் கண்ணதாசன், பட்டுக்கோட்டையுடன் கா. மு ஷெரீப் இடம்பெற்றுள்ள போதும், கா. மு. ஷெரீப் மட்டும் ஏன் குறிப்பிடப்படுவதில்லை? ‘நெஞ்சம் மறப்பதில்லை’ மட்டுமல்ல.
இன்னும் பல பெயர்களில் பழைய பாடல்கள் ஒளிபரப்பினாலும் கா. மு. ஷெரீப் பற்றி எந்தக் குறிப்பும் சொல்வதில்லை. மற்றைய இரு கவிஞர்கள் பற்றியும் பாடல்கள் பற்றியும் விமர்சன தொகுப்பு நூல்கள் உள்ளன.
மு. ஷெரீபுக்கு அப்படி இருப்பதாகத் தெரியவில்லை. இது தான் காரணமோ! தென்னிந்திய ஒளிபரப்பு நிலைய நிகழ்ச்சிகளைத் தழுவியதாகத் தான் இலங்கைத் தமிழ் ஒளிபரப்புகளும் உள்ளன.
ஒரு காலத்தில் ஒலிபரப்பில் நாம்தான் அவர்களுக்கும் வழிகாட்டினோம்! இந்திய ஒளிபரப்புகளில் கூட கா. மு. ஷெரீப் பற்றியோ ஈ. எம். ஹனீபா பற்றியோ ஷேக் முஹம்மத், எஸ். ஹுஸைத்தீன் பற்றியோ குறிப்பிடப்படுவதில்லை.
இந்தியா மெகா டி.வி.யில் ‘அமுதகானம்’ கலைஞர் டி.வி.யில் ‘தேன் கிண்ணம்’ ஜெயா டி.வி, பொதிகை என்பனவற்றில் வெவ்வேறு பெயர்களில் பழைய பாடல்கள் ஒளிபரப்புகிறார்கள். இவற்றிலே மெகாவிலும் பொதிகையிலும்தான் குறிப்புகளைத் தந்து, விறுவிறுப்பாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
என்றாலும் இவர்களும் கா. மு. ஷெரீப் பற்றிக் குறிப்பிட்டதாகத் தெரியவில்லை. இந்த நிலையில் இலங்கை ஒலிபரப்பாளர்கள் என்னதான் சொல்வார்கள்! சட்டியில் இருந்தால் தானே அகப்பைக்கு வரும்.
மெகா டி.வி.யில் ‘அமுதகானம்’ நிகழ்ச்சி மிகப் பிரமாதம். விதவிதமான குறிப்புகளோடு, விறுவிறுப்பாக நடாத்திச் செல்கிறார் அறிவிப்பாளர் என்றாலும் பாண்டியத்தியம் பெற்ற இந்த அறிவிப்பாளர் கூட இடையிடையே சறுக்குவதும் உண்டு.
இருவர் பாடும் பாடலை, ஒருவர் பாடுவதாகக் குறிப்பிடுவார். ‘ஈஸ்வரி’ பாடிய பாடலை சுசீலா பாடியது என்பார். ஆலமங்களம் ராமலட்சுமி பாடிய பாடலை சுசீலா பாடுவதாக சொல்லார். நம் நாட்டு வானொலியைக் கேளுங்கள். இப்படித்தான் அந்தப் பாடல் ஒலிபரப்பாகும் போது, அந்தந்த கவிஞர்கள் பற்றி அறிந்திருப்பதும் அறிவிப்பாளர்களுக்கு உரிய தகைமையாக இருக்க வேண்டும்.
இலங்கை வானொலியில் பாடலாசிரியர்களை நன்கு அறிந்து ஒலிபரப்பிய ஒரே அறிவிப்பாளர் திருமதி ராஜேஸ்வரி சண்முகம். இதனால்தான் இவர் சிறந்த அறிப்பாளராக இன்றும் கூட திகழ்ந்து வருகிறார்.
ஹிபிஷி தெளபீக்,
வெலிகாமம்
நான் பெற்ற செல்வம்
19/02/2012 at 9:40 am (நான் பெற்ற செல்வம்)
நான் பெற்ற செல்வம் நலமான செல்வம்
தேன்மொழி பேசும் சிங்கார செல்வம்!
ஜி. ராமநாதனின் இசையில் கா.மு.ஷெரீப் எழுதி ‘நான் பெற்ற செல்வம்’. என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற பாடல் இது!
திரையில் சிவாஜி கணேசன் தன் குழந்தையிடம் பாடுவதாக அமைந்திருக்கும். டி.எம்.எஸ் தன் கம்பீரமான குரலில் அருமையாகப் பாடியிருப்பார். ஜோன்பூரி ராகத்தில் இழைத்த பாடல்.
தமிழ்த்திரைப்படங்களில் இதுவரை குழந்தைகளை முன்னிலைப்படுத்தி எத்தனயோ பாடல்கள் வந்திருக்கின்றன! ஆனால் கருத்தாழத்தில் இதை மிஞ்சிய பாடல் எதுவுமில்லை என்றுதான் சொல்வேன். அதுவும் இப்பாடலின் இடையே சில அருமையான வரிகள் வரும்.
“ தொட்டால் மணக்கும் ஜவ்வாது!
சுவைத்தால் இனிக்கும் தேன் பாகு!
எட்ட இருந்தே நினைத்தாலும்
இனிக்கும் மணக்கும் உன் உருவம்!”
எத்தனை அழகாய் சொல்லியிருக்கிறார் இந்த வரிகளில் குழந்தையின் பெருமையை! தொட்டால் மணக்கும் ஜவ்வாது.. சுவைத்தால் மட்டுமே தேன்பாகின் இனிப்பு தெரியும். ஆனால் அந்தக் குழந்தை தொலைவில் இருந்தால்கூட, அதை நினைக்கும்போதே ஜவ்வாதின் மணத்தையும் தேனின் சுவையையும் மனதால் உணர முடியும்! எத்தனை அழகான கற்பனை!
துணிவு கொள் !
25/01/2010 at 10:57 am (துணிவு கொள்!)
(பல்லவி)
வாளினைக் கையில் எடடா! – தோழா!
வையகம் உய்யும் வழிதனைச் செய்வோம் – நீ (வாளினை)
(அநுபல்லவி)
நாளல்லாம் உழைத்து நலிகின்றான் ஏழை
நல்நிலை வாழ்வோர் உணர்வதாய் இல்லை – நீ (வாளினை)
(சரணம்)
ஆள்வோரும் செல்வர்க்கே அடிமைக ளானார்
அறிஞரும் வள்ளலின் அடிபணி கின்றார்
தோள்வலி கொண்டநற் சுதந்திர வீரா!
துணிவுதான் இனிநம்மை வாழ்விக்கும் அறிந்தே நீ (வாளினை)
- கவி. கா.மு.ஷெரீப்
தமிழ் முழக்கம் பதிப்பகம்
25/01/2010 at 10:40 am (எழுதிய நூல்கள்)
1955 – ஆம் ஆண்டு “தமிழ் முழக்கம் பதிப்பகம்” பதிப்பித்த கவி.கா.மு.செரீப் அவர்களது நூல்கள்
தமிழரசுக் கழகம் ஏன் வந்தது? என்ன சொல்கிறது?
புது யுகம் – நாடக நூல்
ஒளி – கவிதை
இன்றையச் சமுதாயம் – கவிதை
காதல் வேண்டாம் – கதைகள்
காதலும் கடமையும் – கதைகள்
தமிழரசில் முஸ்லிம்கள் – கட்டுரை
இலக்கியத்திலும் பித்தலாட்டமா? – கட்டுரை
முஸ்லீம் லீக் தேவைதானா? – கட்டுரை
தி.மு.க. நாடாளுமா? – கட்டுரை
தாய்நாடு
23/01/2010 at 12:27 pm (பத்த்திரிக்கையாளர் ஷெரீப், வாழ்க்கைக் குறிப்பு)
பாட்டும் நானே பாவமும் நானே
23/01/2010 at 12:09 pm (பாட்டும் நானே! பாவமும் நானே!)
இந்தப் பாடல் உண்மையிலேயே கவி கா.மு.ஷெரீப் அவர்கள் எழுதியது. ஆனால் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பெயர் குறிக்கப்பட்டிருக்கும்
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே
(பாட்டும்)
கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
(பாட்டும்)
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே (2)
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே (2)
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு
(பாட்டும்)
பத்த்திரிக்கையாளர் ஷெரீப்
23/01/2010 at 11:51 am (பத்த்திரிக்கையாளர் ஷெரீப்)
சாட்டை – 1956 இல் ம.பொ.சி. பொன்விழா மலராக இதழ் வெளிவந்துள்ளது. சென்னையிலுள்ள கா.மு.ஷெரீப் அவர்களது தமிழ் முழக்கம் அச்சகத்தில் அச்சாகி வெளிவந்தது. ஆசிரியர் ஏ.பி.நாகராஜன். ம.பொ.சி. அவர்களது பன்முக ஆற்றலை பல்வேறு பார்வையாளர்களின் கருத்துகள் வழி சிறப்பாக வெளியிட்டிருக்கும் இதழ் இது. அரசியல்வாதி மட்டுமல்ல அச்சுக்கோர்க்கும் கலைஞன் எனப் அச்சுக்கோர்க்கும் ம.பொ.சி யின் படத்துடன் கட்டுரை எழுதியுள்ளது கருத்து விதைப்பிற்காக ம.பொ.சி அவர்கள் எத்துணை இடர்பாடுகளுள் மூழ்கியிருந்தார் என்பதை அறியமுடிகிறது. மறைந்த எல்லையை மீட்கப்போராடிய மாவீரர் என்பதை வினாயகம் அவர்களது கட்டுரையின்வழி அறிய முடிகிறது.








