பெண்: பொன்னான வாழ்வு மண்ணாகி போனா
துயரம் நிலைதானா? உலகம் இதுதானா?
பண்போடு முன்னாளில் – அன்பாக
என்னோடு வாழ்ந்தாரே
வீணான பாலாய் விரும்பாத பூவாய்
இன்றென்னை விடுத்தாரே
என் அன்பை மறந்தாரே (பொன்னான வாழ்வு)
ஆண்: பண்பாடு இல்லாமல் – மண்மீதே
பாழாகி நொந்தேனே
தேனான வாழ்வு திசை மாறிப் போச்சே
நிம்மதி இழந்தாச்சே
தீராத பழியாச்சே
பெண்: பெண்ணென்று பாராமல் – எல்லோரும்
என்மீது பழி சொல்வார்
உள்ளன்பு கொண்டேன் அவர் மீது நானே
ஊராரும் அறிவாரோ?
என் வாழ்வை அழிப்பாரோ?
பாடியவர்கள் : ராஜேஸ்வரி, திருச்சி லோகநாதன், ராதா ஜெயலட்சுமி
பாடலாசிரியர் : கவி கா.மு.ஷெரீப்