இந்தப் பாடல் உண்மையிலேயே கவி கா.மு.ஷெரீப் அவர்கள் எழுதியது. ஆனால் படத்தில் கவிஞர் கண்ணதாசனின் பெயர் குறிக்கப்பட்டிருக்கும்
பாட்டும் நானே பாவமும் நானே
பாடும் உனை நான் பாடவைப்பேனே
(பாட்டும்)
கூத்தும் இசையும் கூற்றின் முறையும்
காட்டும் என்னிடம் கதை சொல்ல வந்தாயோ
(பாட்டும்)
அசையும் பொருளில் இசையும் நானே
ஆடும் கலையின் நாயகன் நானே
எதிலும் இயங்கும் இயக்கமும் நானே (2)
என்னிசை நின்றால் அடங்கும் உலகே…
நான் அசைந்தால் அசையும் அகிலமெல்லாமே (2)
அறிவாய் மனிதா உன் ஆணவம் பெரிதா
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு
(பாட்டும்)
mmuthu
24/04/2012 at 4:53 pm
ஆடவா எனவே ஆடவந்ததொரு
பாடும் வாயினையே மூடவந்ததொரு
மேற்கூறிய வரிகள், படத்தில் பின்வருமாரு
பாடப்பட்டன:
ஆலவாயனொடு பாடவதவனின்
பாடும் வாயை இனி மூட வந்தவொரு
ஆலவாயன்: சிவ பெருமான்