திருவிளையாடல் படத்தில் “பாட்டும் நானே பாவமும் நானே” என்ற பாடல்கவிஞர் கண்ணதாசனால் எழுதப்பட்டது என்று பரவலாக நம்பப்படும் வேளையில் நான் இவ்வலையில் அது கவி.கா.மு.ஷெரீப் அவர்களால் எழுதப்பட்டது என்று குறிப்பிட்டதற்கு ஏதேனும் வலுவான ஆதாரங்கள் உங்களிடத்தில் இருக்கின்றதா? என்று வாசகர்கள் வினவுகிறார்கள். திரு.ஜெயகாந்தன் அவர்கள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறார். அவரிடம் தாராளமாக கேட்டுக் கொள்ளலாம். திரு.ஜெயகாந்த்தன் எழுதிய “ஒரு இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்” என்ற நூலின் நகலை இங்கே உங்கள் பார்வைக்கு வைக்கின்றேன். – அப்துல் கையூம்
ஆதாரம்:
நூல் : ஓர் இலக்கியவாதியின் கலையுலக அனுபவங்கள்,
ஆசிரியர் : ஜெயகாந்தன்
வெளியீடு : ஸ்ரீ செண்பகா பதிப்பகம், சென்னை – 17
Annadorai Kannadhasan
17/10/2014 at 5:07 pm
இந்த சர்ச்சை கண்ணதாசனும், கா.மு.ஷெரிப் அவர்கலும் உயிருடன் இருந்தபோதே வந்தது.ஜெயகாந்தன் பாடலை தப்பாக குறிப்பிட்டிருக்கிறார். இது சிவபெருமானைப் பற்றிய பாடல்.சிவபெருமானே பாடுவது போல அமைந்த பாடல்..கண்ணதாசன் எழுதியது.. நான் எழுதிய பாடல் என்று ஷெரிப் அவர்களே குறிப்பிட்டிருந்தது “ஆற்று வெள்ளம் காத்திருக்கு” என்ற பாடலைத்தான்..அதற்கு கண்ணதாசன் சற்று காட்டமாகவே பதில் சொல்லி இருந்தார்(1980 ஆம் ஆண்டு)..பிறகு ஷெரிப் அவர்களும் ,கண்ணதாசனும் அந்த சர்ச்சயை அத்துடன் விட்டுவிட்டனர்…ஜெயயகாந்தன் பாடலை மாற்றி சொல்லி இருக்கிறார், கா.மு.ஷெரிப்பும்,கண்ணதாசனும் இந்த பாடல் என்னுடயது என்றுதான் சொன்னார்களே தவிர, இருவரும் விட்டுக்கொடுத்து விட்டதுபோல இருந்துவிட்டார்கள் என்பது தான் உண்மை..பாடல் “ஆற்று வெள்ளம்” “பாட்டும் நானே “அல்ல
Annadorai Kannadhasan
17/10/2014 at 5:45 pm
மன்னிக்கவும்…பாடலை தவறாக குறிப்பிட்டுவிட்டேன்..கா.மு.ஷெரிப் எழுதியதாக சொன்ன பாடல்”இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம் தேடி” என்ற பாடல்.படம்-திருவருட்செல்வர்…திருவிளையாடல் அல்ல
அண்ணாதுரை கண்ணதாசன்
13/07/2018 at 1:39 pm
ஜெயகாந்தனின் கட்டுரை கண்ணதாசனின் பார்வைக்கு வரவில்லை என்பதே உண்மை. இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம் தேடி என்ற பாடல் நான் எழுதியது என்று ஷெரீப் சொல்லியதற்கு கண்ணதாசன் சொன்ன கடுமையான பதிலை இங்கு சொல்ல விரும்பவில்லை.அதன் பிறகு ஷெரீப் அவர்களும் பேசவில்லை..
இது நடந்த உண்மை