சாகித்திய அகாதெமி நடத்திய கவி கா.மு.ஷெரீப் நூற்றாண்டு விழா பாபநாசம் ஆர்.டி.பி. மகளிர் கல்லூரியில் 18/12/2014 அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சிறப்பாக நடந்தேறியது.
இலக்கியச் சிந்தனையாளர்கள் பலர் கலந்துக் கொண்டனர். அ.சு.இளங்கோவன் ( சாகித்திய அகாதெமி ), குமரி அபூபக்கர், முனைவர் ஹ.மு.நத்தர்ஷா, முனைவர் இரத்தின வெங்கடேசன் ( சிங்கப்பூர் பல்கலைக் கழகம் ), பேராசிரியர் நசீமா பானு, வே.பிரபாகரன், முனைவர் அலிபாவா, முனைவர் இரா.சம்பத் ஆகியோர் பங்கு பெற்று சிறப்புரையாற்றினர்.
தமிழக அரசியல் வரலாற்றிலும், திரைப்படத்துறையிலும் அரிய சாதனைகள் புரிந்த இம்மாமனிதரை இத்தனைக் காலம் மறந்து போயிருந்த தமிழக மண்ணில், அன்னாரின் சிறப்பை அனைவரும் அறியும் வண்ணம் இவ்வாண்டு அவரது நூற்றாண்டு விழா பல இடங்களிலும் கொண்டாடி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
கவி கா.மு.ஷெரீப் அவர்களின் புகழை உலகுக்கு எடுத்தியம்பும் வகையில் முதன் முதலாக வலைப்பூ அமைத்து செயல்பட்டுவரும் எனக்கு இது மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்துகிறது.