மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள் நடித்து வெளிவந்த “எங்க வீட்டுப் பிள்ளை” என்ற படத்தில் வாலி எழுதிய “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்” என்ற பாடல் மிகவும் கொச்சையாக இருப்பதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. நிறைய பத்திரிக்கைகள் அவரைச் சாடியது.
“என்னை சினிமாவை விட்டுத் துரத்திய பாடல் இது” என்றார் பழம் பாடலாசிரியர் கவி கா.மு.ஷெரீப்! “ஒழுக்கக்கேடு இது. தமிழ்க் கலாச்சாரமும் பெண்மையும் இதுபோன்ற பாடல்களால் இழுக்குப் படுகின்றன” என்றார் ஷெரீப். வண்ணத்திரை (7.11.86) இதழில் இந்தக் கண்டனம் வெளியாகியது. தமிழரசுக் கட்சியின் ஏடான “சாட்டை”க்கு ஆசிரியராக இருந்த ஷெரீப் அதிலும் தன் ஆதங்கத்தை வெளியிட்டிருந்தார்.
“அவள் ஜோடிக்குயில் பாடுவதை சொல்லாமச் சொல்லி மெதுவா அணைச்சுக்கிட்டான்” என்று டி.எம்.எஸ். பாட, “அவள் ஆடியிலே பெண்ணாகி அஞ்சாறு மாசத்திலே அழகா தெரிஞ்சுக்கிட்டா” என்ற பதில் எல்.ஆர்.ஈஸ்வரியின் குரலில் ஒலிக்கும்.
இந்த பாடலுக்கு கண்டனம் தெரிவித்து “இனி சினிமாவில் பாட்டெழுத மாட்டேன்” என்று கூறிய கவி. கா.மு ஷெரீப் அவர்கள் கடைசி வரை தன் வாக்கு மாறாது கொள்கை பிடிப்பு மிக்கவராக இருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.