RSS

Category Archives: துணிவு கொள்!

துணிவு கொள் !

                    (பல்லவி)

வாளினைக் கையில் எடடா! – தோழா!
வையகம் உய்யும் வழிதனைச் செய்வோம் – நீ    (வாளினை)

                    (அநுபல்லவி)

நாளல்லாம் உழைத்து நலிகின்றான் ஏழை
நல்நிலை வாழ்வோர் உணர்வதாய் இல்லை – நீ   (வாளினை)

                    (சரணம்)

ஆள்வோரும் செல்வர்க்கே அடிமைக ளானார்
அறிஞரும் வள்ளலின் அடிபணி கின்றார்
தோள்வலி கொண்டநற் சுதந்திர வீரா!
துணிவுதான் இனிநம்மை வாழ்விக்கும் அறிந்தே நீ   (வாளினை)

– கவி. கா.மு.ஷெரீப்