RSS

Category Archives: நான்

நான்

சிந்தனை என்ற கலப்பை கொண்டு
செய்ய தமிழாம் நிலமதனை
வந்தனை செய்தே உழுதுழுது
வார்த்தை களென்ற எருவுமிட்டு
நிந்தனை யற்ற எதுகை மோனை
நீண்ட வரப்பும் எடுத்துக் கட்டி
அந்தம் மிகுந்த கவிதைப்பயிர்
ஆக்கும் ஏழைப் பாட்டாளி நான்.

”ஒளி’  முதற் கவிதை நூல் . 1946-இல் வந்தது. (ஆனால் 1934-ஆண்டிலேயே முதற் கவிதை ‘குடியரசு’ ஏட்டில் வந்திருக்கிறது)  இன்றைய சமுதாயம், மச்சகந்தி (குறுங்காவியம்), ஆன்மகீதம்  ,  முதலிய சில கவிதைத் தொகுதிகளும் எழுதியுள்ளார்.  மேற்கண்ட கவிதை  ‘ஒளி’ கவிதை நூலிலிருந்து