பெண் : ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?
உண்மைக் காதல் மாறிப் போகுமா?
பெண் : முன்னாளிலே கொண்ட பொல்லாப்பிலே
இன்னாளிலே காதல் மண்ணாவதோ?
ஆண் : சொந்தம் எண்ணியே வாழ்வில் கொண்டேன் காதலே
என்னாசை தங்கமே நேசம் மாறுமா?
பெண் : பகையாலே காதலே அழியாது கண்ணா
ஆண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே.. ! பாரிலே..! (ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?)
பெண் : என்னாவியே கண்ணே உன் போலவே
மண் மீதிலே வேறு பெண் ஏதம்மா?
ஆண் : இன்பம் மேவுதே உந்தன் சொல்லால் நெஞ்சிலே
என்னாசை கண்ணா நீயென் தெய்வமே
ஆண் : அறியாத அன்பிலே இணைந்தோமே ஒன்றாய்
பெண் : பண்போடு நாமே இன்பம் காணுவோம்
நாளுமே..! பாரிலே..! (ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?)
பாடியவர்கள் : சரோஜினி, ஸ்ரீனிவாஸாச்சாரி